செய்திகள் :

நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாக இயக்கநர்

post image

மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கவே சிறிய மாற்றங்கள் செய்யப்படுகிறது என மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்துக்கான இருப்பிடத்தை தேர்வு செய்வது, இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பத்து குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் மற்றும் திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று இடத்தை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மதுரை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், மெட்ரோ ரயில் நிலையமும் இங்கு வர இருக்கிறது என்றார்.

எனவே, இரண்டு நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க ரயில்வே நிர்வாக முதன்மை துணை பொறியாளர் மற்றும் மெட்ரோ திட்ட இயக்குனருடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய இடைவெளியில் பொதுமக்கள் ஒரு (மெட்ரோ to தென்னக ரயில்வே) நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு சுலபமாக சென்று வர ஏதுவாக அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்த அறிக்கை முழுமையாக இல்லை, தற்போது இரண்டு திட்டங்களும் சிறு மாற்றங்கள் செய்து ஒருங்கிணைக்க ஏதுவாக திட்டமிடப்பட உள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். பணிகள் தொடங்கி ரயில் சேவை நான்கு வருடங்களில் நிறைவடையும்.

மதுரை மற்றும் கோவையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய ஒருங்கிணைக்கவே சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவது குறித்தான ஆய்வு தற்போது நடத்தி வருகிறோம்.

மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வகையாக நடத்தப்பட இருக்கிறது. உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க 2 வருடங்களும், சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்க 3 வருடங்கள் ஆகலாம், மொத்தமாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 4 ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நில மோசடி விசாரணை தொடா்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடா்பாக யூ டியூப் சேனலில் சவுக்கு ... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 15 மீனவா்கள் கடந்த ஆக.27, நவ.11ஆகிய தேதிகளில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு... மேலும் பார்க்க

குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி

குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குரூப் 4 பிரிவ... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை தாக்கல் செய்த மனு க... மேலும் பார்க்க

தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எச்பிவி தடுப்பூசியை சோ்க்க வேண்டும்: நிதியமைச்சகத்துக்கு விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபா்தேசிய இலவச நோய் தடுப்பூசித் திட்டத்தில் கருவாய்ப்புற்றுநோய் பாதிப்புக்கு காரணமான மனித ப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்க நிதி ஒதுக்குமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன... மேலும் பார்க்க