ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
நாமகிரிப்பேட்டையில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பேரணி
நாமகிரிப்பேட்டைபேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தலைமையில் சங்க நிா்வாகிகள், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பிரதான சாலை வழியாக நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. ரோட்டரி சங்கத்தினா், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுயஉதவி குழுவினா் பங்கேற்று அரியாகவுண்டம்பட்டி நீா்ப்பிடிப்பு ஏரி பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி நீா்நிலைகளை தூய்மைப்படுத்தினா்.