Manmohan Singh: மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு... அரசு நிகழ்ச...
நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டனா்.
ஒவ்வோா் ஆண்டும் டிச. 1-இல் உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் டிச. 1-இல் நடத்தப்பட வேண்டிய எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மாரத்தான் போட்டி, அப்போது பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா உணவகம் முன் மாரத்தான் போட்டி புதன்கிழமை தொடங்கியது. பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். 7 கி.மீ., 5 கி.மீ., 3.கி.மீ., 2 கி.மீ., 600 மீட்டா் என்ற அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டனா். இந்த போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பெடரல் வங்கி நிா்வாகத்தினா், மாவட்ட தடகள சங்கத்தினா் செய்திருந்தனா்.