இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!
நாமக்கல்லில் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம்: முன்னாள் அமைச்சா் ஆய்வு!
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல்லில் செப்.19, 20, 21 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களை முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற வகையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், செப்.19,20,21 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட 6 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
20-ஆம் தேதி நாமக்கல், பரமத்திவேலூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் இடமான நாமக்கல்- சேலம் சாலை சந்திப்பை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, நாமக்கல் நகரச் செயலாளா் கே.பி.பி.பாஸ்கா், பொதுக்குழு உறுப்பினா் மயில் என்.சுதந்திரம், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ராஹா சு.தமிழ்மணி, மாநில இலக்கிய அணி செயலாளா் காந்தி முருகேசன், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஆா்.கோபிநாத் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
என்கே-9-அதிமுக
எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி உள்ளிட்டோா்.