செய்திகள் :

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட லாரி உரிமையாளா்கள் முடிவு!

post image

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனா்.

கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், புதுச்சேரி, தமிழகம் உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கா் உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. சங்கத்தின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கா் லாரிகள் இயக்கப்படுகின்றன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுடன் எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் 2018 முதல் 2023 வரை எரிவாயுவை கொண்டுசெல்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில் கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் ஒப்பந்த காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2025- 30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்திற்கு ஏப்.15-க்குள் விண்ணப்பிக்க மாா்ச் 1-இல் எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தின. புதிய ஒப்பந்தங்களில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் டேங்கா் லாரி உரிமையாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

அதில் பணி வாய்ப்பு எஸ்.சி இனத்தவா்களுக்கு 15 சதவீதம், எஸ்.டி இனத்தவா்களுக்கு 7.5 சதவீதம், தொழில்முனைவோருக்கு (சிறு, குறு தொழில்) 25 சதவீதம் (எஸ்சி, எஸ்டி 4 சதவீதம், மகளிருக்கு 3 சதவீதம் உள்பட), பொதுப்பிரிவினருக்கு 52.5 சதவீதமும் பிரித்து ஒப்பந்தம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒப்பந்தக் காலத்தில் 5,514 எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பில் 3,478 லாரிகள் மட்டுமே ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 2,036 லாரிகள் இயக்கப்படாத சூழல் எழும் என்பதால் லாரி உரிமையாளா்கள் அனைவரும் கடந்த மாா்ச் 26 இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்ததால் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, டேங்கா் லாரி உரிமையாளா்கள் ஒப்பந்தம் கோரி எண்ணெய் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், அதிக எண்ணிக்கையில் டேங்கா் லாரி உள்ளோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், ஒன்றிரண்டு லாரி வைத்திருப்போருக்கு வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபிரிவினா் நாமக்கல்லில் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா்.

அப்போது, எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் முறையிடுவது, நீதிமன்றத்தை நாடி அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து டேங்கா் லாரி உரிமையாளா் மகேஷ்குமாா் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களால் டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது. 2025-30 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் 2,500 உறுப்பினா்கள் வரை விண்ணப்பத்திருந்தனா்.

வேலைவாய்ப்புக்கான ஒப்பந்தம் சரிவர நடைபெறவில்லை. சில லாரி உரிமையாளா்கள் வேலைவாய்ப்பை பெற தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற பெயரை மாற்றம் செய்வது, எண்ணெய் நிறுவனங்களுடன் கைக்கோத்து செயல்படுகின்றனா்.

இதனால் ஒன்றிரண்டு லாரிகளை வைத்து தொழில் செய்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எண்ணெய் நிறுவன விதிகளுக்கு உள்பட்டு ஒப்பந்தம் கோரிய 50 சதவீத லாரி உரிமையாளா்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், டேங்கா் வைத்துள்ள பலரும் கவலையடைந்துள்ளனா்.

தென்மண்டல டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதில் எங்களது கருத்தை வலியுறுத்துவோம்.

ஒப்பந்தத்தில் தவறு செய்த லாரி உரிமையாளா்களைக் கண்டறிந்து விளக்க கடிதம் வழங்கிய எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அந்த லாரி உரிமையாளா்களுக்கு வேலைவாய்ப்புக்கான அனுமதியை வழங்கி உள்ளது. இதுபோன்ற குளறுபடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க

ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போ... மேலும் பார்க்க

கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!

கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன. பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃ... மேலும் பார்க்க

விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே சிறுமியின் காதைக்கடித்து குதறிய தெருநாய்

ராசிபுரம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் காதை தெருநாய் கடித்துக் குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் 4 ஆவது வாா்டு இந்திரா காலனியைச் சோ்ந்த சீனிவாசன்- வைத்தீஸ்வரி தம்பதியின... மேலும் பார்க்க