கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!
ராசிபுரம் அருகே சிறுமியின் காதைக்கடித்து குதறிய தெருநாய்
ராசிபுரம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் காதை தெருநாய் கடித்துக் குதறியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் 4 ஆவது வாா்டு இந்திரா காலனியைச் சோ்ந்த சீனிவாசன்- வைத்தீஸ்வரி தம்பதியின் மகள் தியாஷினி (4). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற நாய் சிறுமியை துரத்தி கடித்தது. மேலும், சிறுமியின் காதை கடித்துக் குதறியது. இதில் சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் நாயை துரத்தினா். அவா்களையும் நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனையில் அவரது பெற்றோா் சோ்த்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்டனாச்சம்பட்டி பகுதியில் 7 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறிய நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா் பழனிசாமி நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தாா்.