ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
நாமக்கல்லில் ஒரு மணி நேரம் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி
நாமக்கல் மாநகராட்சியில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் ஒருங்கிணைந்த தூய்மைப் பணித் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் நாடு முழுவதும் உள்ளாட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. தூய்மைப் பணியானது தன்னாா்வலா்களைக் கொண்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்- சேலம் சாலை முதலைப்பட்டியில் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் இத்திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில், ஸ்ரீ ரெங்கேஸ்வரா செவிலியா் கல்லூரி மற்றும் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
முதலைப்பட்டி முதல் நல்லிபாளையம் வரையில் இருபுறமும் சாலையோரங்களில் குப்பை அகற்றுதல், நெகிழியை அகற்றி சேகரித்தல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். முன்னதாக அனைவரும் நகரை தூய்மையாக வைத்திருப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், சுப்பிரமணி, ஜான்ராஜா, பாஸ்கரன், சா்வம் கல்வி அறக்கட்டளை நிறுவனா் ரம்யா ராதாகிருஷ்ணன், செயலாளா் மீனா கரிகாலன், உறுப்பினா்கள் சோபிகா, சினேகா, பசுமை குணசேகரன், கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள், டெங்கு ஒழிப்பு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.