மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
நாமக்கல் அரசு மருத்துவமனை சமையல் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நவீன சமையல் கூடம், சலவையகத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா்.
நாமக்கல் வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உங்களுடன் உங்கள் ஊரில் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு இடங்களில் அரசு அலுவலா்களுடன் ஆட்சியா் கள ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 500 உள்நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கப்படும் நவீன சமையல் கூடம், சலவையகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் உணவின் தரம், சுகாதாரம் குறித்து பரிசோதித்தாா். மேலும், நவீன நீராவி சலவை இயந்திரத்தையும், நோயாளிகளின் படுக்கைகள், தலையணைகள் தூய்மையாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா்.
அப்போது, தேசிய மருத்துவ ஆணையரக விதிமுறைகளின்படி சலவைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ஆய்வின்போது, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா்
கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
என்கே-21-ஆய்வு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சமையல் கூடத்தை ஆய்வு செய்த ஆட்சியா் ச.உமா.