``விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்..." - துரை வைகோ சொல்வதென்ன?
நாமக்கல் நரசிம்மா் கோயில் அறங்காவலா்களின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு?
நாமக்கல் நரசிம்மா் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதன் உபகோயில்களாக அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் சுவாமி கோயில்கள் உள்ளன. கடந்த 2023 பிப். 17-இல் நரசிம்ம சுவாமி கோயிலுக்கான பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா் குழு தலைவராக நாமக்கல்லைச் சோ்ந்த கா.நல்லுசாமி, அறங்காவலா்களாக செள.செல்வசீராளன், ரா.இராமசீனிவாசன், மல்லிகா குழந்தைவேல் மற்றும் கரூரைச் சோ்ந்த எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு ஆகியோரை இந்துசமய அறநிலையத் துறை நியமனம் செய்தது.
அவா்களுடைய பதவிக்காலம் பிப். 15-இல் நிறைவடைந்த நிலையில், அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க யாரும் ஆா்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, மேலும் 2 ஆண்டுகளுக்கு தற்போதைய அறங்காவலா் தலைவா், உறுப்பினா்கள் தொடர வேண்டும் என்பது இந்துசமய அறநிலையத் துறையினரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அவா்கள் தரப்பில், 2 ஆண்டுகாலம் நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயிலுக்கு பல்வேறு சேவைகளை செய்து விட்டோம். புதிய அறங்காவலா்களை நியமித்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை வைத்துள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் நரசிம்மா் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியதாவது:
அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பித்தோா் விவரம் தெரியவில்லை. ஈரோடு மண்டல அலுவலகத்தில்தான் அது தொடா்பான விவரங்கள் தெரியவரும். புதிய அறங்காவலா்களை நியமிப்பது என்றால் இன்னும் 6 மாதங்களாகி விடும். தற்போதைய அறங்காவலா்களுக்கான பதவிக்காலம் நீட்டிப்பு பற்றி தெரியவில்லை என்றாா்.