செய்திகள் :

நாமக்கல்: `பணம் பெருகும்' -யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு கோயிலில் குவிந்த மக்கள்..!

post image

நாமக்கல், கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மார்கழி மாத முதல் நாளையொட்டி நேற்று அதிகாலை சுவாமியை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது தற்போது ராகு- கேது பெயர்ச்சி நடக்க உள்ளதால், நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து ஓம் ஸ்ரீ ஓம் என்ற மந்திரத்தை 45 நிமிடம் ஜெபித்தால் அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். உங்களைத் தேடி பணம் கொட்டும் என ஜோதிடர் ஒருவர் யூடியூப் சேனலில் கூறியிருந்ததும், அதை நம்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலேயே கோயில் வளாகத்தில் திரண்டதும் தெரியவந்தது.

அதேசமயம் இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கும் முன்கூட்டியே யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறிது நேரத்தில் அந்த ஜோதிடர் தலைமையில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து காலை 6.35 மணி முதல் 7.25 மணி வரை மந்திரத்தை கூறி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்ட பொதுமக்கள் வந்த வாகனங்களை கோட்டை ரோட்டின் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீஸார் பஸ்களை வேறு வழியில் திருப்பி விட்டனர். இதனால் நாமக்கல் நகரில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Zomato: `காதலியை தேடிய பயனர்கள்!' - ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ கடந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடிய தேடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது.கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பயனர்கள் அதிகம் தேட... மேலும் பார்க்க

Delhi: 10 லட்சம் கேட்டு சித்திரவதை செய்தாரா மனைவி? பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலையின் பகீர் பின்னணி

மனைவி கொடுமைப்படுத்தியதற்காக டெல்லியைச் சேர்ந்த பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா. இவர் கடந்த 2016ஆம்... மேலும் பார்க்க

``குளிர்பானம் விஷம் என்றால் தயாரிப்பை தடை செய்யுங்கள்; என் வருமானத்தை தடுக்காதீர்கள்" - ஷாருக்கான்

`குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்' என்று கூறப்பட்டாலும், அதை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை. அதேசமயம், அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் வருகிறது... மேலும் பார்க்க

Infosys அலுவலகத்துக்குள் நுழைந்த சிறுத்தை... ஊழியர்களுக்கு WFH - என்ன நடந்தது?

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவானான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் மைசூர் அலுவலகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைப் பார்க்க அறிவுறுத்தி... மேலும் பார்க்க

20 நிமிடத்தில் 2 பாட்டில் விஸ்கியை குடித்த சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் மரணம்..

தாய்லாந்து கிழக்கு பகுதியில் வசிக்கும் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் தனகரன் காந்தே (21) ஒரு விபரீத போட்டியில் கலந்து கொண்டு, மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தனகரன் காந்தே பணத்திற்காக எந்தவித ... மேலும் பார்க்க

சல்மான் கான் பிறந்தநாளில் ரூ.6.35 லட்சத்துக்கு ஆடைகள் வாங்கி தானம் வழங்கிய ரசிகர்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் தனது 59-வது பிறந்தநாளை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். சல்மான் கான் பீயிங் ஹூமன் என்ற தொண்டு நி... மேலும் பார்க்க