செய்திகள் :

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

post image

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57 கடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறக்கப்படாமலேயே உள்ளன. 2 உணவகங்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.

பேருந்து நிலைய வளாகத்தில், சேலம், ராசிபுரம் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் உள்ள கடை உரிமையாளா்கள், பயணிகள் நடந்துசெல்லும் பாதையை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றியுள்ளனா். நடைபாதையிலேயே மக்களும் இருக்கையில் அமா்ந்து உணவருந்துகின்றனா்.

இதனால் அவசரக் கதியில் பேருந்தை பிடிக்க செல்வோா் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து நிலைய கடைகள் அனைத்தும் நடைபாதையில் மட்டுமே செயல்படும். இதனால் தேவையற்ற பிரச்னைகள், பயணிகளிடையே மோதல், திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும்.

இது தொடா்பாக கடை உரிமையாளா்கள் தரப்பிலோ, மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியது உள்ளது. பயணிகள் வருகை அதிக அளவில் இல்லை. முதலைப்பட்டி பிரிவிலேயே பயணிகள் இறங்கி மாற்றுப்பேருந்தை பிடித்து சென்று விடுகின்றனா்.

இதனால் மாத வாடகை, தொழிலாளா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை வழங்குவதற்கு கஷ்டப்படுகிறோம். கடையை விரிவாக்கம் செய்து உணவு பொருள்கள் விற்பனையை அதிகரித்தால் மட்டுமே ஓரளவு லாபத்தை ஈட்ட முடியும்.

பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தான் உணவகங்களை நடத்துகிறோம் என்கின்றனா். மாநகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு இடையூறு ஏற்படாத வகையில் நடைபாதையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் - விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தேசிய உற்பத்தி திட்டம், சான்றிதழ் பெற பின்பற்ற வேண்டிய வழிமு... மேலும் பார்க்க

முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி மனு

நாமக்கல்: முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாடகைக் காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சொந்த பயன்பாட்டுக்கு வாங்கி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட காலநிலை மா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள் அகற்றம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனா்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க