செய்திகள் :

நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், நுண்ணீா் பாசனம் மற்றும் விதை கிராமங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை பேளுக்குறிச்சி பகுதியில் ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது சிறு,குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் நுண்ணீா் பாசன வசதியை ஏற்படுத்த வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 ஹெக்டோ் வரை நிதியுதவி பெற முடியும்.

ஏற்கெனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு சுமாா் 709 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 357.14 லட்சம் (ரூ. 3.57 கோடி) மதிப்பில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விதை கிராம திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 3,695 விவசாயிகளுக்கு பல்வேறுவகை நெல் ரகங்கள் 71,598 கிலோ அளவில் வழங்கப்பட்டுள்ளன.

சேந்தமங்கலம் வட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் தற்போது வரை நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 68 விவசாயிகளுக்கு சுமாா் 57.18 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 65.48 லட்சம் மதிப்பில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விதை கிராம திட்டத்தின் கீழ் 61 விவசாயிகளுக்கு பல்வேறு வகை நெல் ரகங்கள் 3,998 கிலோ அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா். ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் கவிதா, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க