நாமக்கல்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேரின் உடல்களும் உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலமாகக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது தற்கொலை செய்துகொண்டனரா என்பது உடல் கூறாய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.