செய்திகள் :

நாம் தமிழர் கட்சியினர் விலகக் காரணம் என்ன? சீமான் விளக்கம்!

post image

சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை, ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது என மதுரையில் சீமான் பேட்டி

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் "மும்மொழிக் கொள்கையில் திமுக, அதிமுகவின் நிலைப்பாடு என்ன?, மும்மொழிக் கொள்கையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?, முதன் முதலில் ஹிந்தியை திணித்தது யார்? ஹிந்தியை திணித்தவர்களிடம் திமுக கூட்டணி வைத்து வெற்றியும் பெற்றுள்ளது.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் ஹிந்தி இல்லை?, ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சிறப்பு, இந்த நாட்டை பாஜக துண்டிக்க துடிக்கிறது, ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழி வாரியாக மாநிலங்கள் எதற்காக பிரிக்கப்பட்டது?

ஹிந்தி மொழி பயில வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு காரணங்கள் என்ன?, இந்திய மொழி ஹிந்தி என எந்த சாசனத்தில் உள்ளது, இந்தியா பழமொழி பேசும் மக்கள் ஒன்றினைந்த ஐக்கியம், ஹிந்தி மொழி கற்பித்தல் மிகவும் ஆபத்தானது, நாடு எங்கும் ஹிந்தி மொழியை திணிப்பது தேவையற்றது, இரண்டு மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய ஹிந்தி மொழியை திணிக்க நினைப்பது தவறு, ஹிந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம், ஹிந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்ப வேண்டாம், ஹிந்தி மொழியை திமுக உளமார எதிர்க்கிறதா?, ஹிந்தி திணிப்புக்கு எதிராக 800 பேர் போராடினார்கள், ஆனால் 18 பேர் என கணக்கு காட்டினார்கள்.

நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும், சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள், நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்படுவேன், நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை.தமிழ் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்.

திராவிடம் பேசாமல் பெரியார் குறித்து பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே நான் செல்லவில்லை, ஆகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது" என கூறினார்.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க