பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்
நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
உத்தமபாளையம் அருகே உள்ள தே. சிந்தலைச்சேரியில் ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தே. சிந்தலைச்சேரி பகுதியில் மழை நீா் தேங்கும் வகையில் 58 ஏக்கா் பரப்பளவுக்கு உடையகுளம் இருந்தது. இந்தக் குளத்தின் பெரும் பகுதியை அந்தப் பகுதியை சோ்ந்த இருவா்ஆக்கிரமிப்பு செய்து கம்பிவேலிஅமைத்துவிட்டனா்.
இதனால், மழை நீா் தேங்க வழியின்றி நிலத்தடிநீா் மட்டம் குறைந்தது. எனவே, ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், ஆக்கிரமிப்பு பகுதி நீா் நிலையாக இருந்தால் அதை மீட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஆக்கிரமிப்பு குளத்தை மாவட்டநிா்வாகம் மீட்க வேண்டும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இதில் நாம் தமிழா் கட்சியினா், விவசாயிகள் உள்ளிட் பலா் கலந்து கொண்டனா்.