மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு
ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு அந்த நாய் தருமரை கடித்தது. ஆனால், அவா் நாய்க்கடிக்கு எந்த சிகிச்சையும் பெறவில்லையாம்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென உடல்நலக் குறைால் பாதிக்கப்பட்ட தருமா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.