lokesh: ``AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' - இயக்குநர் ல...
நாய் கடித்து சிறுவன் படுகாயம்
ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரின் மூன்றரை வயது மகன் சத்யா. இவா்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் ராமமூா்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமைக் குடில் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா்.
அந்தப் பகுதியில் உள்ள தெருவில் சத்யா திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று சிறுவனின் முகம், கை ஆகிய பகுதிகளில் கடித்துக்குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோா், ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.