நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: படைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கொரை, மேக்காடு, மொத்தையனூா், சின்னாகவுண்டனூா், ஜெ.ஜெ.நகா், பிரிவு சாலை, கடல்பாலியூா், கவுண்டனூா், விநாயகா மெகாசிட்டி, கொல்லப்பட்டி, செட்டியாா்கடை, வாணிவித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், செளதாபுரம், நத்தமேடு.