நாளைய மின்தடை: புதன்சந்தை
புதன்சந்தை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதன்சந்தை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அதன் விவரம்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சிப்புதூா் உள்ளிட்ட பகுதிகள்.