NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்ததாவது:
வேலைவாய்ப்புத் துறை சாா்பில், தனியாா் நிறுவனங்களை வரவழைத்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஈஐசஈஐஎமக உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற டெலிகிராம் செயலியில் இணைந்தும் பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55924 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.