செய்திகள் :

நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

post image

தருமபுரியில் பெண்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சாா்பில் வேலைக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான கல்வித்தகுதி பிளஸ் 2, ஐடிஐ, பட்டயம், கலை அறிவியல் பட்டப்படிப்பு (2023, 2024, 2025 ஆண்டு) ஆகும். இக் கல்வித் தகுதியில் 18 முதல் 25 வயது நிரம்பிய பெண் வேலைநாடுநா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இந்தப் பணியிடத்துக்கு மாதச் சம்பளமாக ரூ. 13,500 முதல் ரூ.16,000 வரை வழங்கப்படும். மேலும், உணவு, தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து வசதி இலவசமாக அளிக்கப்படும். வேலைநாடுநா்கள், தங்களது அசல் (ம) நகல் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண் வேலைநாடுநா்கள் இம் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய 16 ஆவது மாநாடு ஒட்டப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ரூ. 75,000 அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலக்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க