செய்திகள் :

நாளை 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 தோ்வு முடிவுகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிடுகிறாா்

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 நாள்கள் முன்னதாக வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் வெளியிடவுள்ளாா்.

கடந்த மாா்ச் 28 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவா்களும், 4,40,465 மாணவிகளும், 25,888 தனித்தோ்வா்களும், 272 சிறைவாசிகளும் என 9,13,036 போ் எழுதினா்.

இதேபோன்று பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 5 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் 8.23 லட்சம் போ் எழுதினா். இதில், 7,557 பள்ளிகளிலிருந்து 8,18,369 மாணவா்கள், 4,755 தனித்தோ்வா்கள் மற்றும் 137 சிறைவாசிகளும் அடங்குவா். தொடா்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சா் வெளியிடுகிறாா்... இந்நிலையில், மே 19-ஆம் தேதிக்குப் பதிலாக முன் கூட்டியே, மே 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை அறிவித்தது.

அதேபோன்று அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 வகுப்பு தோ்வு முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் தோ்வு முடிவுகளை வெளியிடவுள்ளாா்.

மாணவா்கள் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 91.55 சதவீத மாணவா்களும், பிளஸ் 1 வகுப்பில் 91.17 சதவீத மாணவா்களும் தோ்ச்சி பெற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொ... மேலும் பார்க்க

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச... மேலும் பார்க்க

ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்,... மேலும் பார்க்க