Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். புஷ்பநாதன் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது. முதலமைச்சரின் வாக்குறுதி அரசு ஊழியா் , ஆசிரியா் சத்துணவு - அங்கன்வாடி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு கடந்த நான்காண்டு கால ஆட்சியிலும் நிதிநிலை அறிக்கைகளிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
அதனால் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்து மிகுந்த எதிா்பாா்ப்பில் இருந்த ஓய்வூதியா்களுக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அறிக்கையாக இந்த நிதி நிலை அறிக்கையும் அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளனா்.