செய்திகள் :

நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி, 3 வயது மகள் கடத்தல்; 8 பேர் கைது - பின்னணி என்ன?

post image
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப் (36). இவர் அதே பகுதியில் 'ஏ.பி.ஆர்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளை அலுவலகங்களை நடத்தி நிதி நிறுவனத்தை விரிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கால சிறப்பு சேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்திய அல்தாப் தாசிப், கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் குவிந்தன.

கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பல்

பணத்தை இழந்த மக்கள் ஆத்திரத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்யாறில் செயல்பட்டு வந்த ஏ.பி.ஆர் தலைமை அலுவலகத்தைச் சூறையாடினார்கள். அதைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கி இருந்த அல்தாப் தாசிப்பை போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்தாப் தாசிப் ஜாமீன் பெற்று, இப்போது வெளியில் இருக்கிறார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டதால், அல்தாப் தாசிப்பிற்கு பலரோடு விரோதம் சூழ்ந்தது.

இந்த நிலையில், அல்தாப்தாசிப்பின் மனைவி சப்ரின் பேகம் மற்றும் 3 வயது மகள் அல்வினா ஆகிய இருவரும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல காரில் புறப்பட்டபோது, ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டனர்.

ராணிப்பேட்டை நவல்பூரில் வசிக்கும் சப்ரின் பேகத்தின் தாய் ஹயாத்துன் பேகத்தைத் தொடர்புகொண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், 'இருவரையும் விடுவிக்க வேண்டுமானால், 1 கோடி ரூபாய் தர வேண்டும்' என மிரட்டியிருக்கிறார். இது குறித்து உடனடியாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார் ஹயாத்துன் பேகம்.

விரைந்து விசாரணையில் இறங்கிய ராணிப்பேட்டை போலீஸார், கடத்தல் கும்பலிடம் இருந்து வந்த செல்போன் நெம்பரின் சிக்னலை ஆய்வு செய்து பின்தொடர்ந்தபோது, ராணிப்பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லக்கூடிய சாலையில் உள்ள கேஸ் குடோன் அருகே இருப்பதாகத் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

அங்கு கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்த போலீஸார், அல்தாப் தாசிப்பின் மனைவி சப்ரின்பேகம், அவரின் மகளை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, கடத்தல் கும்பலைச் சேர்ந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் (34), பார்த்திபன் (35), ருத்ரேஸ்வரன் (31), சரத்குமார் (31), கார்த்திக் (34), ஏசுதாஸ் (30), வினோத் (35) மற்றும் கோமதி (36) என்ற பெண் உட்பட மொத்தம் 8 பேரை கைது செய்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் முதல் குற்றவாளியான வசந்தகுமாரும், அல்தாப்தாசிப் நடத்திய நிதி நிறுவனக் கிளை ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்தவர்தான். அல்தாப்தாசிப்பிடம் இருந்து பணம் பறிக்கும் திட்டத்துடன் அவர் இந்த கடத்தலுக்குத் திட்டம் தீட்டி மூளையாகச் செயல்பட்டிருக்கிறார். இதனிடையே, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீஸார், அதில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட ராணிப்பேட்டை போலீஸார், எஸ்.பி கிரண் ஸ்ருதி வெகுவாகப் பாராட்டினார்.

`பணக்காரர்கள் மட்டும்தான் டார்கெட்; ஏழைகளை துன்புறுத்தமாட்டேன்!' - திருடி சிக்கிய இளைஞர் பேச்சு

மும்பை போரிவலி பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுக்ராம் என்பவர் தனது குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு கதவை திறந்து உள்ளே இருந்த லாக்கரை உடைத... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் - ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்க... மேலும் பார்க்க

குஜராத்: போலி மருத்துவர்கள் தொடங்கிய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சிக்கியது எப்படி?

போலி மருத்துவர்கள் இணைந்து பெரிய மருத்துவமனையைத் தொடங்கி ஒரே நாளில் மாட்டிக்கொண்ட சம்பவம், குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றுள்ளது. சூரத்தின் உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட விருந்தி... மேலும் பார்க்க

Whatsapp : வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பகிர்ந்த மெட்டா; ரூ.213 கோடி அபராதம் விதித்த CCI ஆணையம்!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களை இயக்கி வருகிறது. இதில் பாமர மக்கள் வரை சென்ற தளம்தான் வாட்ஸ்அப். இலவச வீடியோ, ஆடியோ கால், இளைஞர்களை கவரும் வகை... மேலும் பார்க்க

`ஒரு கொலை இல்லை... இரண்டு கொலை’ - கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இள... மேலும் பார்க்க

சென்னை: பெண் இன்ஜினீயர் கொடுத்த பாலியல் புகார் - பாடகர் குருகுகன் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், கடந்த 25.10.2024-ம் தேதி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் . அதில் கூறியிருப்பதாவது, ``சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க