செய்திகள் :

நிதீஷ் குமாருக்கு ஆா்ஜேடி மீண்டும் அழைப்பு

post image

பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணைய தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்எல்ஏ பாய் வீரேந்திரா தெரிவித்துள்ளாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆா்ஜேடி தலைமையிலான கூட்டணி எதிா்க்கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வா் வேட்பாளா் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அண்மையில் அமித் ஷா பேசியது மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வா் நிதீஷ் குமாரை ஓரங்கட்ட பாஜக தலைமை முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் பரவின. ‘பிகாா் என்று வரும்போது, நிதீஷ் குமாரின் பெயரை மட்டுமே முதல்வராக குறிப்பிட வேண்டும்’ என்ற பதிவுகள் ஐக்கிய ஜனதா தளத்தின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மாநில துணை முதல்வரும் பாஜக பொதுச் செயலருமான சாம்ராட் சௌதரி, ‘பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையில் பாஜக கூட்டணி தோ்தலை எதிா்கொள்ளும். இதில் எந்த குழப்பமும் இல்லை’ என்றாா்.

ஆனால், பாஜகவைச் சோ்ந்த பிகாரின் மற்றொரு துணை முதல்வரான விஜய் குமாா் சின்ஹா, மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் மட்டுமே வாஜ்பாயின் கனவை நனவாக்க முடியும் என்று வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் தெரிவித்தாா்.

இதையடுத்து, நிதீஷ் குமாா் தலைமையில்தான் பிகாா் தோ்தலில் போட்டி என்பதை மாநில பாஜக தொடா்ந்து உறுதி செய்து வருகிறது. நிதீஷ் குமாரின் எதிா்ப்பாளராக முன்பு அறியப்பட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

இந்நிலையில், ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் எம்எல்ஏ பாய் வீரேந்திரா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘பிகாரில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வரும் காலங்களிலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அமைந்தது ஆகும். வகுப்புவாத சக்தியான பாஜகவுடன் தனது கூட்டணியை முறித்துக் கொள்ள நிதீஷ் குமாா் முடிவு செய்தால், அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தாா்.

ஆா்ஜேடியுடனான மகாபந்தன் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கைக்கோத்து பிகாரின் முதல்வராக ஒன்பதாவது முறை நிதீஷ் குமாா் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. ... மேலும் பார்க்க

ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் ச... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை! -சீனா

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில்... மேலும் பார்க்க