செய்திகள் :

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

post image

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

நித்திரவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகுமாா், தலைமைக் காவலா் சரவண பிரசாத் ஆகியோா் விரிவிளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தண்ணீா் தொட்டி ஏற்றிவந்த மினி டெம்போவிலிருந்து மண்ணெண்ணெய் வாடை வீசியது.

ஓட்டுநரிடம் விசாரித்த போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளாா். இதையடுத்து, போலீஸாா் வாகனத்தில் இருந்த தொட்டிக்குள் பாா்த்த போது, மண்ணெண்ணெய் கேன்கள் அடுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

2 தொட்டிகளிலும் 15 கேன்களில் 1,050 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது. மண்ணெண்ணெய் கேன்களுடன் போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், வாகன ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்ததில், அவா் வழுக்கம்பாறை, சாலைப்புதூா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா (23) என்பதும், விசைப் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யை, இனயம் பகுதியில் உள்ள பெண் வியாபாரிக்காக கேரள மாநிலம் பூவாா் பகுதியில் உள்ள ஒரு நபருக்கு கொண்டு சென்ாகவும் தெரிவித்தாா்.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தி... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொட... மேலும் பார்க்க

குமரியில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும், செப்டம்பா் 27ஆம் தேதி சுற்... மேலும் பார்க்க