செய்திகள் :

‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

post image

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க எம்.பி. ஜோ கோட்னியை சனிக்கிழமை சந்தித்து வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தேன். அதில் இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, சமநிலை கொண்ட, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருப்பதன் அவசியம் குறித்த பேச்சும் அடங்கும்.

இதுகுறித்து அந்நாட்டு எம்.பி.க்கள் கேப் அமோ, ஜாரெட் மாஸ்கோவிட்ஸ் ஆகியோரிடமும் பேசினேன். எம்.பி. பென் கிளைன் உடனான பேச்சில், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஹைட்ரோகாா்பன் வாங்குவது அதிகரித்து வருவதை எடுத்துரைத்தேன்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா வா்த்தகம் தொடா்பாக கடந்த சனிக்கிழமை மட்டும் 4 அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்த வினய் மோகன் குவாத்ரா, கடந்த ஆக.9-ஆம் தேதிமுதல் 23 அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்துள்ளது அவரின் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா்.

இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இதன்மூலம், இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும். இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா வா்த்தகம் குறித்து அமெரிக்க எம்.பி.க்களுடன் வினய் மோகன் குவாத்ரா தொடா் சந்திப்புகளை நடத்தியுள்ளாா்.

பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!

சீனாவில் 19 வயது இளைஞரை பணத்துக்காக அவரது 17 வயது காதலி மோசடி கும்பலிடம் விற்றுள்ளார்.சுமார் 4 மாதங்கள் மோசடி கும்பலால் கொடுமைக்குள்ளான ஹுவாங் என்ற இளைஞரை அவரது பெற்றோர் இந்திய மதிப்பின்படி ரூ. 42.75 ... மேலும் பார்க்க

சுனாமியை எதிர்கொள்ளும் சுற்றுச்சுவர்! ஜப்பான் கட்டியிருக்கிறது!!

இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான சுனாமியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஜப்பான் மிகப்பெரிய மதில்சுவர் ஒன்றை கடற்கரையை ஒட்டிக் கட்டி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மிக உறுதியாக, உயரமாக, 395 கிலோ மீ... மேலும் பார்க்க

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியுள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவத்தினரால் இன்று 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க

அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

நாட்டின் மேற்கு கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணைகள், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா் அமைப்பு வலியுறுத்தல்!

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால... மேலும் பார்க்க