செய்திகள் :

நியாய விலைக்கடை விற்பனையாளர் பணி: நேர்முகத் தேர்வு அறிவிப்பு!

post image

சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் நடத்தும் விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து  கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம் வழி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு  11.06.2025 முதல் 14.07.2025 முடிய “விவசாயக் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிலையம் (ACSTI) மாதவரம் பால் பண்ணைக் காலனி, மாதவரம்,சென்னை - 600 051." (ஆவின் தலைமையகம் எதிரில்) நேர்முகத் தேர்வு  நடைபெற்று வருகிறது.

இணையவழி விண்ணப்பித்துள்ளோர் www.drbchn.in என்ற இணையதள முகவரியில் தங்களது நேர்முகத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாளில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு இணையதளம் வழி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்! ரூ.12,000 ஊக்கத்தொகை!

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1)தொடங்கி வை... மேலும் பார்க்க

பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மத்திய ... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் உயர்வு! - அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக் காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் ... மேலும் பார்க்க

தவெகவின் யானை சின்னத்துக்கு தடையா? ஜூலை 3 தீர்ப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் (ஜூலை 3) சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.பகுஜன் சமாஜ் கொடியில் உள்... மேலும் பார்க்க

மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது! - நீதிபதிகள் வேதனை

பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும் மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது எனவும் சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகங்... மேலும் பார்க்க

இபிஎஸ் வீட்டிற்குச் செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் பதில்!

’இபிஎஸ் வீட்டிற்குச் செல்வீர்களா?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ’அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்’ என்று முதல்வர் பதில் அளித்தார்.திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ம... மேலும் பார்க்க