செய்திகள் :

நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வென்கல சிலை!

post image

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வென்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த பிப். 5 அன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்

இந்நிலையில், அவரது பிறந்த நாளன்று (பிப்.5) நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ரொனால்டோவின் 12 அடி உயரமுள்ள முழு உருவ வென்கல சிலையானது அவரது ரசிகர்களால் திறக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கோல் அடித்த பின்னர் அதனை கொண்டாடும் விதமாக ரொனால்டோ பின்னப்பற்றி வரும் ‘சியூ’ எனும் செய்கையை குறிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இத்தாலிய கலைஞரான செர்ஜியோ ஃபுர்னாரி என்பவர் உருவாக்கியுள்ளார்.

முன்னதாக, போர்த்துல நாட்டின் தேசிய அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கால்பந்து உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலோன் தி’ஓர் விருதை இவர் 5 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தனது தலைமையிலான அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.அம்மாநிலத்தில் அசாம் ரைப்பில்ஸ... மேலும் பார்க்க

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத... மேலும் பார்க்க

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8)... மேலும் பார்க்க

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க