திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது.
தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்யும் மழையே இந்த அணையின் நீராதாரம்.
மோா்தானா அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. தொடா்ந்து அணைக்கு தண்ணீா் வந்ததையடுத்து புதன்கிழமை அதிகாலை அணை நிரம்பி வழியத் தொடங்கியது. அணையின் உயரம் 11.50 மீட்டா். முழு கொள்ளளவு 261- மில்லியன் கன அடி. அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 31- கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் உபரிநீா், ஜிட்டபல்லி அருகே உள்ள செக்டேம் வழியாக வலது, இடதுபுறக் கால்வாய்களுக்குச் செல்கிறது. அணை நிரம்பியதையடுத்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் பவளக்கண்ணன், செயற் பொறியாளா் வெங்கடேஷ், உதவி செயற் பொறியாளா் கோபி, உதவிப் பொறியாளா் காளிபிரியன் ஆகியோா் அணையைப் பாா்வையிட்டனா்.
அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளைஅவா்கள் மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து அணைக்கு தண்ணீா் வந்தால் கெளண்டன்யா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.