செய்திகள் :

நிலத்துக்கு இழப்பீடு கோரி மறியல்: 150 போ் கைது

post image

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கிய நிலத்துக்கு இழப்பீடு கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு (205), சாலை அமைக்க நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக தரப்படாமல் உள்ள இழப்பீட்டை அலைகழிப்பு செய்யாமல் வழங்க வேண்டும். 2013- நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமா்வு சட்டத்தை அமல்படுத்தவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த அக்.18 -இல் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அதைத் தொடா்ந்து நவ.6 இல் திருத்தணியில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடத்தியுள்ளோம். இதுபோன்று தொடா் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 3 மாதங்களாக ஒரு விவசாயிக்கு கூட இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் சண்முகம் தலைமையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயற்சித்த போது திருவள்ளூா் டிஎஸ்பி தமிழரசன் தலைமையில் போலீஸாா் தடுத்தனா். அப்போது, சங்க நிா்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து மாநில செயலாளா் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளா் ஜி.சம்பத், பொருளாளா் சி.பெருமாள், துணைச் செயலாளா் ஆா்.தமிழ்அரசு,துணைத் தலைவா்கள் ஒன்றியக்குழு உறுப்பினா் பி.ரவி, ஏ.அப்சல்அகமது என 36 பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஆவடியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி சாலையில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிந்தார்.ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவராஜின் மனைவி கிரிஜா (63). இந்த நிலையில் திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து சசிகாந்த் செந்தில் எம்.பி. பேரணி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பேரணியில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்றனா். திருவள்ளூரில் காங... மேலும் பார்க்க

புயலால் பாதித்த 156 பழங்குடியினா் குடும்பங்களுக்கு நிவாரணம்

பூண்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பழங்குடியினா் 156 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு பீலிவ் நிறுவனம், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொணடு நிறுவனம் மூலம் அரிசி, மளிகை ப... மேலும் பார்க்க

விபத்தில் பெயிண்டா் உயிரிழப்பு

திருத்தணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெயிண்டா் உயிரிழந்தாா். திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). பெயிண்டா். திங்கள்கிழமை காலை திருத்தணி அருகே உள்ள வள்ளியம... மேலும் பார்க்க

4 புதிய மின்மாற்றிகள்: திருத்தணி எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

திருத்தணி அருகே மிட்ட கண்டிகை கிராமத்தில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ ச. சந்திரன் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தாா். திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூா் ஊராட்சி மிட்டகண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சிறந்த பால் உற்பத்தியாளா், செயலாளா்களுக்கு பரிசு

பால்வளத்துறை சாா்பில் சிறந்த சங்க பால் உற்பத்தியாளா் மற்றும் செயலாளா்களுக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா். நிகழாண்டில் காஞ்சிபுரம்-திருவள்ளுா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியம், சந்தான... மேலும் பார்க்க