செய்திகள் :

நிலம் வாங்க போறீங்களா? இந்த 19 விஷயங்களையும் கண்டிப்பா செக் பண்ணுங்க மக்களே..!

post image

ஒரு நிலத்தைப் பார்ப்பது... பிடித்தால் வாங்குவது... - இது மட்டும் நிலம் வாங்கும் பிராசஸ் கிடையாது.

நிலத்தைப் பார்த்து, பிடித்தப் பிறகு, ஒரு சில 'செக்'குகளை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான், நிலம் வாங்கியதற்கு பின்பு, எந்த சிக்கல் மற்றும் தொந்தரவு இல்லாமல் நிம்மதியுடன் பிற்காலத்தில் இருக்க முடியும்.

அதற்கு எவற்றை செக் செய்ய வேண்டும் என்று பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் முத்துசாமி.
சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி
சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி

1. சொத்தினை விற்பவர் தனிப்பட்ட விபரங்கள்(பெயர், வயது, விலாசம், ஆதார் எண், பான் எண்)

2. மூலபத்திர ஆவணங்கள்

3. தெளிவான உரிமைப் பரிமாற்றம் அறிக்கை

4. தற்போதைய உரிமையாளர் அல்லது விற்பனையாளர் பெயரில் புதுப்பிக்கப்பட்ட வருவாய் பதிவுகள்

5. நிலுவையில் உள்ள கடன் பாக்கி மற்றும் அடமானம் வைத்த பத்திரம் அல்லது ரசீது உள்ளதா?

6. முந்தைய விற்பனை ஒப்புதல் மற்றும் முன்பணம் ரசிது இருப்பில் உள்ளனவா?

7. புதுப்பிக்கப்பட்ட சொத்து சார்ந்த வரி ரசீதுகள் உள்ளனவா - நாளது தேதியில் சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி/கட்டணங்கள், மின்சார இணைப்பு

8. குறைந்தது 33 ஆண்டுகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட அன்றைய தினம் வரையிலான வில்லங்கச் சான்றிதழ்

9. அரசு நிர்ணயித்த சட்டரீதியான நிலவடிவமைப்பு ஒப்புதல்கள்(layout/land approvals) மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரியின் ஒப்புதல் நடவடிக்கை, கட்டண ரசீது, பிறப்பித்த உத்தரவுகள்.

10. வருவாய் துறை சார்ந்த ஆவணங்கள் (பட்டா, அடங்கல், FMB, A Register உள்ளிட்டவை)

வீட்டு மனை
வீட்டு மனை

11. குறிப்பிட்ட நிலத்தின் மீது அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கையகப்படுத்தல் அறிவிக்கைகள்/ அறிவிப்புகள் ஏதேனும் உள்ளதா – வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற நில வரி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (H.R & C.E), வக்ஃபு வாரியம், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI), ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள், விமான நிலையம், நீர்நிலைகள், தொழில்துறை, பாதை போன்றவை

12. உள்ளூர் திட்டமிடல் பகுதி அல்லது திட்டமிடப்படாத பகுதி (Local Planning Area or Non-Planning Area)

13. நீர்வழிப்பாதைகள், மயானங்கள், உயர் மின்னழுத்த மின் கம்பிகள் பாதை என ஏதேனும் குறிப்பிட்ட நிலத்திலோ, நிலத்தின் அருகிலோ இருக்கிறதா?

14. குறிப்பிட்ட நிலம் அரசு பொது வழி சாலையில் தடை இல்லா அணுகல் அமைய பெற்று உள்ளதா, நிலத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு செல்ல சரியான பாதை வசதி உள்ளதா?

15. தற்போதைய உரிமையாளர் அல்லது விற்பனையாளருக்கு குறிப்பிட்ட நிலத்தை விற்க முழுமையான உரிமை அல்லது அதிகாரம் உள்ளதா?

புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!

16. அந்த நிலத்தின் மீது ஏதேனும் பவர் ஆஃப் அட்டார்னி (அதிகார பத்திரம்) உள்ளதா

17. நிலத்தின் மீதோ அல்லது நிலத்திற்காகவோ ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா

18. நிலத்தின் தாய் பாத்திரம் (மேற்கூறிய)அசல் ஆவணங்கள் உள்ளதா

19. அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநரை முன்னரே அணுகி சட்ட ஆலோசனை பெறுவது சிறந்தது

ஆகியவற்றை செக் செய்யுங்கள். நிலத்தை வாங்கும்போது, பத்திரங்கள் மட்டும் முக்கியமல்ல... மேலே குறிப்பிட்டுள்ள இன்ன பிற விஷயங்களும் முக்கியம். இவற்றை செக் செய்வது மூலம் வருங்கால சந்ததிக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதனால், கண்டிப்பாக இதெல்லாம் செக் செஞ்சுடுங்க மக்களே.

நிலம், வீடு எந்த மதிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்? பெண்களுக்கு இருக்கும் சூப்பர் தள்ளுபடி

நிலம் அல்லது வீடு வாங்குவதில் மிக மிக முக்கியம், 'பத்திரப் பதிவு'. 'நிலம், வீடு எந்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும்?', 'முத்திரைக் கட்டணம் எவ்வளவு?', 'பதிவுக் கட்டணம் எவ்வளவு?' என்று ஏகப்பட்ட கேள்விகள... மேலும் பார்க்க