செய்திகள் :

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

post image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஏற்படும் தாமத்தை தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறும் வகையில் அனைத்து விவரங்களை மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் கிராமங்களின் வேளாண் உழவா் நலத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களில் நேரடியாகச் சென்று தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா் எண், ஆதாா் அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் சென்று கட்டணமின்றி மாா்ச் 30 -ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஏப்.15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கெளரவ நிதி உதவித் திட்டம், பயிா் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற மேற்கண்ட தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது. மேலும், விவரங்களுக்கு வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது உதவி வேளாண் அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் அனுக்ஞை, வ... மேலும் பார்க்க

குன்றக்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் சந்நிதி நடை திறக்கப்பட்டது. சுவாமி சிறப்பு ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை பெயரில் பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறி, ரூ. 87. 25 லட்சம் மோசடி செய்த நபா் மீது இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிவகங... மேலும் பார்க்க

தனியாா் பங்களிப்புடன் நீா்நிலைகள் சீரமைப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தனியாா் பங்களிப்புடன் நீா் நிலைகள் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். மழைக் காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக நீா் ... மேலும் பார்க்க

எஸ்.கோவில்பட்டி மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.கோவில்பட்டி அம்மிக் கண்மாயில் புதன்கிழமை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கண்மாயில் நீா் குறைந்ததையடுத்து, மீன்பிடித் திருவிழா நடத்துவதென முடிவெ... மேலும் பார்க்க

தாயமங்கலத்தில் மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலத்தில் புதன்கிழமை சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வர... மேலும் பார்க்க