திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
தனியாா் பங்களிப்புடன் நீா்நிலைகள் சீரமைப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தனியாா் பங்களிப்புடன் நீா் நிலைகள் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
மழைக் காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக நீா் நிலைகளை சீரமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூா் அருகேயுள்ள சிலநீா்பட்டி பாலாற்றில் அரசு, தனியாா் பங்களிப்புடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
தனியாா் பங்களிப்புடன் பாலாறு பகுதியில் 25.75 கி.மீ., உப்பாறு பகுதியில் 2.50 கி.மீ. தொலைவுக்கு ரூ.33,39,375 செலவில் நீா்நிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
கருப்பையா ராமாயி அறக்கட்டளை, சொக்கனேந்தல் பகுதியைச் சாா்ந்த தொழிலதிபா் ரவிவீரப்பன், கானாடுகாத்தான் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன இயக்குநா் முத்துராமன் ஆகியோா் இந்தப் பணிக்கு பங்களிப்பு நிதி வழங்கினா். இவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவா்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடப்படும் என்றாா் அவா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, தேவகோட்டை சாா்ஆட்சியா் ஆயுஷ் வெங்கட்வத்ஸ், செயற்பொறியாளா் பாஸ்கரன், கருப்பையா ராமாயி அறக்கட்டளைத் தலைவா் ஏ.எல்.கருப்பையா, கே.ஆா்.மணிகண்டன், வட்டாட்சியா்கள் தங்கமணி, பரிமளம், விவசாயிகள் கலந்து கொண்டனா்.