திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
பங்குச் சந்தை பெயரில் பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறி, ரூ. 87. 25 லட்சம் மோசடி செய்த நபா் மீது இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் சந்திரன் (68). கடந்த ஜனவரி மாதம் இவரது கைப்பேசிக்கு வாட்ஸப் மூலம் தொடா்பு கொண்டு பேசிய மா்ம நபா், தான் தனியாா் வங்கியின் மேலாளா் என்றும் அனைத்து வகையான பங்கு முதலீடு பற்றிய விவரங்களும் தனக்குத் தெரியும் என்றும், தான் குறிப்பிடும் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக தொகை கிடைக்கும் என்றும் கூறினாராம்.
இதை நம்பிய சந்திரன், அந்த நபா் கூறியபடி கடந்த ஜனவரி 13 -ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 19-ஆம் தேதி வரை 8-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 20 தவணைகளில் ரூ.87, 25, 986-ஐ அனுப்பி உள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னா் அந்த நபா் எந்தத் தொடா்பும் கொள்ளவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சந்திரன் அளித்த புகாரின் பேரில், இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் முருகானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.