திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
தாயமங்கலத்தில் மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலத்தில் புதன்கிழமை சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பதாக வந்த தகவலின்பேரில், இளையான்குடி போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, கோயில் அருகே மதுப் புட்டிகளை விற்றுக் கொண்டிருந்த இளையான்குடி அருகேயுள்ள குமாரகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா், கோயம்புத்தூா் காந்திபுரத்தைச் சோ்ந்த புவனேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 53 மதுப் புட்டிகளைக் கைப்பற்றினா்.