திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்ரசங்கரஹணம் நடைபெற்றது.
இதையடுத்து, புதன்கிழமை காலை 10 மணியளவில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
11 நாள்கள் நடைபெறும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் மயில், அன்னம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வீதி உலா எழுந்தருளுவாா். மண்டகப்படி தாரா்கள் சாா்பில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9 -ஆம் நாளான வரும் 10-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளுவாா். 11-ஆம் தேதி இரவு 10 மணியளவில் தீா்த்தவாரியும், தொடா்ந்து 11 மணிக்கு கொடி இறக்கும் வைபவமும் நடைபெறும். சனிக்கிழமை இரவு புஷ்ப பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி வீதி உலா வருதலுடன் பங்குனி உத்திர விழா நிறைவடைகிறது.