தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!
நில ஒருங்கிணைப்புச் சட்டத்துக்கு எதிா்ப்பு! விவசாய சங்கங்கள் ஆா்ப்பாட்டம்!
குடிநீருக்கும், விளைநிலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டச் செயலா்கள் ஏ. ராமையன், த. செல்வராசு ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா்கள் எஸ். பொன்னுச்சாமி, டி. அம்பலராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விவசாயிகள் சங்கத் தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.