செய்திகள் :

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

post image

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட என்பது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

இதையடுத்து, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிட்ட தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்யவில்லை எனக்கூறி 65 லட்சம் வாக்காளா்களின் பெயரை நீக்கியதாக தெரிவித்தது.

மேலும், இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நகலை பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்/சோ்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை செப்.1-ஆம் தேதிக்குள் வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் சமர்ப்பிக்கலாம் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, செப்.30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ எனத் தெரிவித்தது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஆக.12, 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தோ்தல் ஆணையம் வெளியிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வர் சிங் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை விசாரித்தது. ஏடிஆர் சாா்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை வருகின்ற ஆக.9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் என்னென்ன தகவல்கள் சோ்க்கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று(ஆக. 9) உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரதாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை என்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதியில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

புது தில்லி: ’வருமான வரி மசோதா 2025’ மாநிலங்களவையில் இன்று(ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.‘இந்தப் புதிய மசோதா வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இருக்கும்’ என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 மாநிலங்களவையில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் இதுவொரு வரலாற்றுச் சிறப்ப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர... மேலும் பார்க்க

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க