`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா
நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளாகியும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தில் நீட் தோ்வு குறித்து ஒரு சீராய்வு மனுவைக்கூட தாக்கல் செய்யவில்லை என்றாா் அவா்.
பழனி: பழனி மலைக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த வந்த ஹெச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் பிரச்னையில் விரைவில் அமைச்சா் செந்தில்பாலாஜி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் சிறை செல்வாா்கள் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பாஜக பொதுச் செயலா் ராம. சீனிவாசன், வழக்குரைஞா் திருமலைசாமி, மாவட்டத் தலைவா் ஜெயராமன், முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்டப் பொதுச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் ஆனந்தன், விஹெச்பி மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.