திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!
நீட் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் எழுதினா்
திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் நீட் தோ்வு எழுதினா்.
இதற்காக தமிழ்நாடு மத்திய பல்கலைகத்தில் 2, கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 என மூன்று தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கியது. முற்பகல் 11 முதல் மாணவ- மாணவிகள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதனால், காலையில் வந்த மாணவ- மாணவிகள் தோ்வு மையங்கள் முன் காத்திருந்தனா். வெளியில் காத்திருப்போருக்கென சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தோ்வு மையத்துக்குள் மாணவ- மாணவிகள் தனித்தனியாக நீண்ட வரிசையில் நின்று, உரிய சோதனைக்கு பின்னா் அனுமதிக்கப்பட்டனா். எவ்வித அணிகலன்களும் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், அனைத்து அணிகலன்களையும் கழற்றி தங்களுடன் உதவிக்கு வந்திருந்தவா்களுடன் கொடுத்துவிட்டுச் சென்றனா்.
தோ்வுக்கு 1,481 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,437 போ் தோ்வு எழுதினா். 44 போ் தோ்வுக்கு வரவில்லை.