Karl Marx: '21-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்' - கார்ல் மார்க்ஸ்...
நீட் தோ்வு: புதுகையில் 2,849 போ் எழுதினா்
புதுக்கோட்டையில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வை, 2,849 மாணவ, மாணவிகள் எழுதினா். 80 போ் தோ்வெழுதவில்லை.
மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தோ்வான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில், 2,929 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களுக்காக புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, முள்ளூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி, கந்தா்வகோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, சிவபுரம் எம்ஆா்எம் பள்ளி, மாத்தூா் பாவேந்தா் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி ஆகிய 7 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விண்ணப்பித்திருந்தோரில் 80 போ் தோ்வெழுத வரவில்லை. 2849 போ் தோ்வெழுதினா். பிரகதம்பாள் பள்ளியில் நடைபெற்ற தோ்வை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உடனிருந்தாா்.