செய்திகள் :

`சென்னையில் கொள்ளை… தூத்துக்குடியில் கைது!' - வைர நகை கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

post image

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.  வைர வியாபாரியான இவர், வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி சந்திரசேகரின் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், ரூ.20 கோடி மதிப்பிலான  வைர நகைகளை பார்த்துவிட்டு விலையை பேரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், வைரங்களை வடபழனியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு கொண்டு வரும்படியும் அங்கு பணம் தருவதாகவும் போனில் கூறியுள்ளார் அருள்ராஜ். அதன்படி சந்திரசேகரும் நேற்று (4-ம் தேதி) மாலை, வைரங்களை எடுத்துக் கொண்டு வடபழனியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை

அருள்ராஜ் தங்கியிருந்த அறைக்கு சந்திரசேகர் சென்றார். அவருக்கு குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அதே அறைக்குள் மறைந்திருந்த நான்கு பேர், சந்திரசேகரை தாக்கியுள்ளனர். பின்னர், அவரை கட்டிப் போட்டுவிட்டு ரூ.20 கோடி மதிப்பிலான வைரங்களுடன் காரில் தப்பிச் சென்றனர். இச்சம்பம் தொடர்பாக வடபழனி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தப்பிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.    

தப்பியோடிய கும்பல் தூத்துக்குடிக்கு வருவதாக ரகசிய தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார், அந்த கும்பல் காரில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு முதல் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே காரில் வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் காரை சோதனை செய்ததில் ஒரு கைப்பையில் வைரங்கள் இருந்ததைப் பார்த்து விசாரணையை துரிதப் படுத்தியதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப் போட்டு தப்பியோடிய சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோர்  என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வைர நகைப்பை

பின்னர், அவர்களிடமிருந்த வைரங்களும், காரும் கைப்பற்றப்பட்டது. சிப்காட் காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  கொள்ளை கும்பல் சிக்கிய தகவலறிந்த  சென்னை துணை ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட  போலீஸார், சிப்காட் காவல் நிலையம் வந்து அங்கிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த தார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.

`நடிக்க வாய்ப்பு; திருமணம்’ - நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண்

பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் நடிப்பில் சமீபத்தில் ஒ.டி.டி.யில் வெளியான `ஹவுஸ் அரஸ்ட்’ வெப்சீரியஸ் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவுஸ் அரஸ்ட் வெப் சீரியஸ் Ullu App என்ற செயலில் வெளியானது. அதில... மேலும் பார்க்க

திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; சிறுவன் குத்திக் கொலை... கொலையாளிகளைத் தேடும் போலீஸ்!

கரூர் மாவட்டம், குளித்தலை கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்ம... மேலும் பார்க்க

Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை

மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு ... மேலும் பார்க்க

`தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்' ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர் தப்பிக்க ஆற்றில் குதித்து மரணம்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இம்தியாஸ் அகமது மக்ரே, தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடந்த சனிக்கிழமை மக... மேலும் பார்க்க

``பழைய 5 ரூபாய் நோட்டுக்கு ஒரு கோடி..'' ஆசைகாட்டி துப்புரவு தொழிலாளியிடம் ரூ.18 லட்சம் மோசடி

மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்' என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத... மேலும் பார்க்க

மும்பை: `கார் சதுரங்க வேட்டை' 1375 பேரிடம் ரூ.20 கோடி மோசடி செய்த கும்பல்.. 246 வாகனங்கள் மீட்பு

மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்... மேலும் பார்க்க