செய்திகள் :

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி: பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி

post image

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்.

அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதையடுத்து ராமதாஸ் தரப்பு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Anbumani said about the general committee's verdict.

ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு: அரசாணை வெளியீடு

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆா்த்ரோஸ்கோபி (நுண் துளை எலும்பு சிகிச்சை) துறையை ரூ.7.77 கோடியில் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பொது சுகாதாரம், மருத்துவ துறைகளுக்கு இயக்குநா்கள் நியமனம்: 17 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள்

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநராக டி.கே.சித்ரா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல தமிழகத்தில் 17 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடு ஒதுக்கீடு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் ... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொ... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி !

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார். ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க