செய்திகள் :

நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு ஆதரவு! யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு!

post image

நீதிபதி எஸ்.கே.யாதவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், 'இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது' என்று பேசியிருந்தார். இவர் பேசிய விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

நீதிபதியின் பேச்சுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க | விஎச்பி விழாவில் நீதிபதி சர்ச்சை பேச்சு: உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை!

மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். அதேபோல மாநிலங்களவையில் 55 எம்.பி.க்கள் சேர்ந்து நீதிபதி யாதவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்பட 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் முன்பாக ஆஜரான நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு, வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க | 'பாஜக அரசு பயப்படுகிறது; ராகுல் ஒருபோதும் அப்படி செய்யமாட்டார்' - பிரியங்கா காந்தி

இதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நீதிபதி யாதவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் பேசினார்.

யோகி ஆதித்யநாத் சில நாள்களுக்கு முன்பு, 'மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. யார் உண்மையைப் பேசினாலும் இவ்வாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்ய அழுத்தம் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசுகிறார்கள், அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை பாருங்கள்' என்று பேசியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி எஸ்.கே.யாதவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி இன்று குவைத் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா். பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த... மேலும் பார்க்க

2 ஸ்டெல்த் போா்க் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

ஸ்டெல்த் தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட 2 போா்க் கப்பல்கள் இந்திய கடற்படையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மத்திய அரசு ஒப்புதல் அளித்த 17ஏ ரக திட்டத்தின் கீழ், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ம... மேலும் பார்க்க

ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள ... மேலும் பார்க்க

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிக பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளுமுள்ளு தொடா்பாக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைசச்ர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை சிகிச்சை பெ... மேலும் பார்க்க

சொந்த ஊர்களுக்கு பணம் அனுப்புவதிலும் இந்தியா முதலிடம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் மக்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், தங்கள் செலவுபோக மீத சம்பளத் தொகையை இந்திய... மேலும் பார்க்க