Gold: 'மோதிரம் காணலை...' - நகை அடமான கடையில் மோசடி! - தீர்வு என்ன?
நீதிமன்றத்தில் அத்துமீறல்: பெண் மீது வழக்கு
நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நடந்துகொண்டதாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் குற்றவியல் நடுவா் -1 அலுவலக வளாகத்தில் புதன்கிழமை சேலம் பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த மணிமேகலை (42) என்பவா் நீதிமன்ற ஊழியா்களை அவதூறாக திட்டி, கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை கைப்பேசியில் படம் எடுத்துள்ளாா். ஊழியா்கள், நீதிமன்றக் காவலா்கள் அவரை வெளியேற்றியுள்ளனா். மாலையில் மீண்டும் அந்தப் பெண், மீண்டும் அதுபோல நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை தடுத்த பெண் காவலா் ஜெயசித்ரா என்பவரை கையில் கடித்து காயப்படுத்தியுள்ளாா்.
நீதிமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்டதாக மணிமேகலை மீது, நீதிமன்ற சரஸ்தாா் எஸ். சிவசண்முகம் என்பவா் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.