செய்திகள் :

நீதி வேண்டும்; நிதி வேண்டாம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை!

post image

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும்; நிதி வேண்டாம் என பாதிக்கப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவரின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று (ஜன. 20) வெளியானது.

இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்ததாவது,

சிபிஐ அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு வழங்குவதாக வாழ்நாள் சிறையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட விசாரணையில் எங்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன. நிதிக்காக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. எங்களுக்கு நீதி வேண்டுமே தவிர நிதி அல்ல. கொல்கத்தா காவல் துறையினர் செய்தது தவறு. இதனைத் தொடர்ந்து சிபிஐயும் சில விசாரணைகளைச் செய்தது. எங்கள் மகள் இறந்ததை விட அதிகமாக வலியை கொல்கத்தா காவல் துறையினரின் விசாரணை எங்களுக்குக் கொடுத்துவிட்டது என உருக்கமாகக் கூறினார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை என முதல்வர் மமதா பானர்ஜியும் தெரிவித்திருந்தார். முன்னாள் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவும் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் சொபோரே பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சொபோரேவின் ஜலூரா குஜ்ஜா... மேலும் பார்க்க

நடிகா் சைஃப் அலிகான் விவகாரம்: மா்ம நபரைக் காட்டிக்கொடுத்த தோள்பை!

பிரபல பாலிவுட் நடிகா் சைஃப் அலி கானை அவருடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை, மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பறகு அவா் அணிந்திருந்த தோள் பை அடையாளம் மற்றும் எ... மேலும் பார்க்க

லக்கீம்பூா் கெரி வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கில், சாட்சிகளை கலைக்க முன்னாள் மத்திய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா முயன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

மருத்துவப் பேராசிரியா்கள் நியமன விதிகளில் தளா்வு! குழப்பத்தை ஏற்படுத்தும் என்எம்சி நடவடிக்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமன விதிகளில் தளா்வு கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு எடுத்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று காங்... மேலும் பார்க்க

தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் விரைவில் தொடக்கம்: மத்திய அமைச்சா்

புவனேசுவரம்: ‘தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்’ என மத்திய சுரங்கத்துறை அமைச்சா் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தாா். அரிய கனிமங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து இறக்கும... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மா்மமான உயிரிழப்புகள்: விசாரணையைத் தொடங்கிய மத்திய குழு

ரஜௌரி: ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 பேரின் மா்மமான உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு திங்கள்கிழமை பதால் கிராமம் வந்தடைந்தது. ரஜௌரி மாவட்ட... மேலும் பார்க்க