செய்திகள் :

நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்: பிரதமர் மோடி

post image

உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் என பிரதமர் நரேந்திர மோடி என தெரிவித்தார்.

ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை(ஜூலை 23) மாலை தொடங்கியது.

இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா் நடைபெற்ற விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

வணக்கம் சோழ மண்டலம் என தமிழில் தனது உரையைத் தமிழில் தொடங்கிய பிரதமர் மோடி,

"நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..." எனும் சிவபெருமானை வாழ்த்திப் போற்றும் பாடலை பாடியவர், சிவனின் தரிசனமும், சிவ முவக்கத்தையும், இளையராஜாவின் இசையும், ஓதுவார்களின் பாடல்களும் எனது ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான்

சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான். நாட்டின் வளர்ச்சிக்காக, 140 கோடி மக்களின் நலனுக்காக சிவனிடம் எனது வேண்டுதலை வைத்தேன். ஆயிரம் ஆண்டுகள் நிறைவு செய்த பிரகதீஸ்வரர் கோயிலில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கைகொண்ட சோழப்புரம் கண்காட்சியை கண்டு வியந்தேன்.

சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமத்தேன். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று.

சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கான எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழ இரு பெயர்களும் நாட்டின் அடையாளங்கள்.

பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கு முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை நிகழ்ந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன. ராஜேந்திர சோழனிந் அடையாளம் புனித கங்கை நீரை கொண்டு வந்ததோடு இருக்கிறது.

அன்பே சிவம்

சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை... அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பே சிவம் என்ற கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் சங்கடங்களுக்கு மற்றும் பிரச்னைக்கு இடமே இருக்காது. அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை கொண்டவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்

உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள். நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். உலகின் கட்டவியல் அற்புதங்களில் ஒன்றுதான் கங்கைகொண்ட சோழபுரம். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் நாட்டின் பொற்காலங்களில் ஒன்று. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ்வதற்கு சோழர்களே காரணம். சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் நாட்டின் இரு பிரகடனங்கள். இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு என கூறினார்.

சிவசக்தி

நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்.

தந்தை மீது மகன் வைத்த பக்தியே காரணம்

தஞ்சை பெரிய கோயிலைவிட கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சிறிதானது. இதற்கு தந்தை ராஜராஜன் மீது ராஜேந்திர சோழன் கொண்ட பக்தியே காரணம்.

ஆபரேஷன் சிந்தூர் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியது

நாட்டின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டு. நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள். நாம் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ராஜராஜன், ராஜேந்திர சோவனுக்கு பிரம்மாண்ட சிலை

தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என மோடி அறிவித்தார்.

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

Prime Minister Narendra Modi said that the Cholas were the pioneers of water management, which is talked about all over the world.

நலம்பெற்று வீடு திரும்பினேன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு த... மேலும் பார்க்க

சிகிச்சை முடிந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புகிறார்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து

சேலம்: நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 75,000 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்த... மேலும் பார்க்க

மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ

கோவை: மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார். கோவை ... மேலும் பார்க்க

அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திமுகவை மாற்றுவோம் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்ட... மேலும் பார்க்க