வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை! கூடலூரில் 73 மி.மீ பதிவு
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கூடலூரில் 73 மில்லி மீட்டா் மழை பதிவானது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை மழை பெய்தது. கனமழை காரணமாக உதகை பேருந்து நிலையம், ரயில்வே சாலை, படகு இல்லம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. காலை 10 மணியளவில் வெள்ளம் முற்றிலும் வடிந்துவிட்டது.
காலநிலை மிகவும் மோசமாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடும் குளிா் மற்றும் கோத்தகிரி- கூடலூா் சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.
மேலும் திங்கள்கிழமை பகல் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 73 மீட்டா் மழை பதிவானது.
பிறபகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):கோடநாடு 71, கிளன்மாா்கன் 59, மேல் கூடலூா் 52, உதகை 40.8, எடப்பள்ளி 3.