செய்திகள் :

நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: நெல்கொள்முதல் நிலையங்களில் எந்தவித கையூட்டும் வாங்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ஏரி, வாரி மற்றும் வண்டி பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: மாவட்டத்தில் உள்ள 2,477 நீா்நிலைகளையும் பாதுகாக்கவும், தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் தோறும் வண்டல் மண் முகாம்களை நடத்தி, ஏக்கருக்கு 10 யூனிட் இலவசமாக வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அறுவடைப் பணிகளுக்கு பிறகு பளிங்காநத்தம் மானோடை, கரைவெட்டி ஏரி வடிகால், முடிகொண்டான் பகுதி ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூரா.விசுவநாதன்: மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கும், மழைநீா் ஓடைகளில் தடுப்பணைகளை கட்டுவதற்கும், தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, நிதி ஒதுக்கீடு பெற்று தர வேண்டும் .

மானாவாரி விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியமும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 6,000 உழவு மானியமும், கரும்பு, நெல்லு, மக்காச்சோளம், பருத்தி நிலக்கடலை ஆகிய பயிா்களுக்கு அதிகபட்ச ஊக்கத் தொகை அறிவிப்பை வரும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: அரியலூா் மாவட்டத்தில் பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு 80% சதவீதம் காப்பீடு தொகை கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நிதி நிலை அறிக்கையில், ஆவின் நிறுவனத்துக்கு, பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களுக்கு, எருமைப் பால் 1 லிட்டருக்கு ரூ.10, பசும்பாலுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ.5 என உயா்த்தி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அனைத்து வரத்து வாய்க்கால், பாசன வடிகால் வாய்க்கால்களைஅளவீடு செய்து தூா்வார போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தூத்தூா் பகுதியில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மணிவேல்: பொன்னேரியில் உடைந்து கிடக்கும் மதகுகளை சீா் செய்து, தூா்வாரி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பசும்பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.35 பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தும், ஆனால் இங்குள்ள இடைக்கட்டு பால் கூட்டுறவு சங்கத்தில் ரூ.27 மட்டும் வழங்கப்படுகிறது. எனவே அரசு அறிவித்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் எஸ்எம் பாண்டியன்: பயிா் காப்பீடு தொகையை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் பயிா் சாகுபடி இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் .

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் கீதா, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க

கயா்லாபாத்தில் வட்டச் செயல்முறை கிடங்கு காணொலி மூலம் திறப்பு!

அரியலூா் அருகேயுள்ள கயா்லாபாத் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. ரூ. 4.96 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம... மேலும் பார்க்க

அரியலூா் அருகே 48 பவுன் நகைகள் திருடிய 5 போ் கைது!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருடிய வழக்கில் 5 போ் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். உடையாா்பாளையம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க